சவூதி அரேபியாவில் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள கேரள நபர்: 34 கோடி ரூபாய் பொது நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட உள்ள நிலையில் விடுதலை

சவூதி அரேபியா: சவூதி அரேபியாவில் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள கேரளா நபரை மீட்க 34 கோடி ரூபாய் பொது நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹிம் தனக்கு 26 வயது இருக்கும் போது சவூதி அரேபியாவுக்கு வேளைக்கு சென்றார். அந்த நடை சேர்ந்த ஒருவரிடம் கார் ஓட்டுநராகவும், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது மகனின் மெய்க்காப்பாளராகவும் அப்துல் ரஹிம் பணியாற்றினார். இந்த நிலையில் அந்த சிறுவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அப்துல் ரஹிம் சிறையில் அடைக்கப்பட்டார்.

காரில் சென்று கொண்டிருந்த போது ரெட் சிக்னளை மீறி செல்லுமாறு அப்துல் ரஹிமை அந்த சிறுவன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. சிறுவனை சாந்தப்படுத்த முயற்சித்தபோது சுவாசதிற்காக அவரது தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த கருவி துண்டிக்கபட்டு அவர் உயிரிழந்த நிலையில் அப்துல் ரஹிம் கைதானார். 18 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அவரை மீட்க கேரளா வரலாற்றில் இல்லாத அளவிற்கு 34 கோடி ரூபாய் பொது நிதி திரட்டப்பட்டது. நிவாரணத்தை பெற்று கொள்ள சிறுவனின் குடும்பம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திரட்டப்பட்ட நிதி ஒன்றிய வெளியுறவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரியாத் நீதிமன்றத்தின் மூலம் அந்த நிதி எதிர்தரப்பினருக்கு வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் அப்துல் ரஹிம் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

The post சவூதி அரேபியாவில் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள கேரள நபர்: 34 கோடி ரூபாய் பொது நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட உள்ள நிலையில் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: