திருப்பதி எம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ சந்திரபாபு நாயுடு மகனுடன் சந்திப்பு: தெலுங்கு தேசத்தில் இணைய உள்ளதாக தகவல்

திருமலை: திருப்பதி எம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கோனேடி ஆதிமூலம் திடீரென சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷை சந்தித்து பேசினார். விரைவில் அவர் தெலுங்கு தேசத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சத்தியவேடு தொகுதியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் கோனேடி ஆதிமூலம். இவரை, வரும் மக்களவை தேர்தலில் திருப்பதி எம்.பி. தொகுதி வேட்பாளராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும் திருப்பதி எம்.பி.யாக உள்ள குருமூர்த்தியை சத்தியவேடு தொகுதி எம்.எல்.ஏ. வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. ஆனால் ஆதிமுலம் தான் எம்.எல்.ஏ. பதவிக்குதான் போட்டியிடுவேன், எம்.பி.யாக வேண்டாம் என கூறினார். ஆனால் அதனை கட்சி தலைமை ஏற்கவில்லை. இந்நிலையில் அமைச்சர் பெத்தி ராமச்சந்திரா சத்தியவேடு எம்.எல்.ஏ வேட்பாளரான குருமூர்த்தியை வைத்து திருப்பதியில் அந்த தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆதிமூலம் அமைச்சர் பெத்தி ராமசந்திரா தனது தொகுதியில் சட்டவிரோதமாக மணல், ஜல்லி எடுப்பதாக குற்றம் சாட்டினார்.  தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தன் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ேநற்று தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுசெயலாளர் நாரா லோகேஷை சத்தியவேடு எம்.எல்.ஏ கோனேடி ஆதிமூலம், நாராயணவனம் மண்டல ஜில்லா பரிஷத் உறுப்பினர் கோனேடி சுமன் ஆகியோர் சந்தித்து பேசினர். விரைவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு முன்னிலை கோனேடி ஆதிமூலம் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

The post திருப்பதி எம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ சந்திரபாபு நாயுடு மகனுடன் சந்திப்பு: தெலுங்கு தேசத்தில் இணைய உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: