நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு டலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ஜோதி முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்வதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது அணியான 90 நாட்கள் இலவச பயிற்சி 29.3.2023 முதல் 26.6.2023 வரை நடத்தி முடிக்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான கடலோர பாதுகாப்பு குழுமத்தினரால் நடத்தப்பட உள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதி உள்ள மீனவ வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு டலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: