கேரள ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா.. போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதியும் வரை திரும்பப்போவதில்லை என அறிவிப்பு!!

திருவனந்தபுரம் : கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொல்லம் அருகே சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய ஆளுநர், சாலையோரம் போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்பினரை நோக்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும் அங்கிருந்த தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய ஆளுநர் தான் அங்கிருந்து திரும்பப்போவதில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார். போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை திரும்பப்போவதில்லை என்று கூறிய அவர், போராட்டக்காரர்களை போலீசார் பாதுகாப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

The post கேரள ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா.. போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதியும் வரை திரும்பப்போவதில்லை என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: