மாநகராட்சி, எம்.பி. அலுவலகம் உள்பட குமரி முழுவதும் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

நாகர்கோவில் : குடியரசு தின விழாவையொட்டி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் நடந்த விழாவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் தேசிய கொடியேற்றி வைத்தார். மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், மாநகர நல அலுவலர் ராம்குமார் மற்றும் மண்டல தலைவர் செல்வக்குமார், ஜவகர், கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 40 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் நடந்த குடியரசு தின விருந்தில் கலெக்டர் தர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

* நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விஜய் வசந்த் எம்.பி. தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாற்று திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தடிக்காரன்கோணம் வீரபுலியை சேர்ந்த பிரதீஸ் விஜய், குலசேகரம் தும்பக்கோடு பகுதியை சேர்ந்த அருள் அஜின் ஆகியோரை பாராட்டி , அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கான உபகரணங்களை விஜய் வசந்த் எம்பி. வழங்கினார். இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின், நாகர்கோவில் கிளை சார்பில் நாகர்கோவில் கேப் ரோடு அண்ணா பஸ் நிலைய பகுதி வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து நடந்த குடியரசு தின விழாவில், மேயர் மகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வணிகர் சங்க பேரவையின் மாநில செயல் தலைவர் டேவிட்சன், தலைவ ர் எம்.ஏ.கே. சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி, எம்.பி. அலுவலகம் உள்பட குமரி முழுவதும் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: