பாஜவில் மீண்டும் இணைந்தார் ஷெட்டர்

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த ஆண்டு நடந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் தேர்தலுக்கு முன் திடீரென பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் வேட்பாளராக ஹூப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட ஷெட்டர் தோல்வி அடைந்தார். இருந்தாலும் அவரை சட்டமேலவை உறுப்பினராக்கினார் சித்தராமையா. இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய சூழலில் நேற்று டெல்லியில் உள்ள பாஜ மாநில தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஜெகதீஷ் ஷெட்டர், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் முன்னிலையில் பாஜவில் இணைந்தார்.

நாட்டின் நலனுக்காக மீண்டும் பாஜவில் இணைந்ததாகவும், மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் ஷெட்டர் கூறினார். இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில்,‘ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி மரியாதை கொடுத்தது. அவரும் பாஜவிற்கு திரும்ப செல்லமாட்டேன் என்று உறுதியளித்தார். காங்கிரஸ் கட்சியில் அவர் அவமதிக்கப்படவில்லை என்றார்.

 

The post பாஜவில் மீண்டும் இணைந்தார் ஷெட்டர் appeared first on Dinakaran.

Related Stories: