உச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக பிரசன்னா பி.வரலே பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரசன்னா பி வரலே நேற்று காலை பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோர் அடஙகிய கொலிஜியம் குழு கூட்டம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் காலியாக இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை நியமிக்க நியமிக்க கொலிஜியம் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பிரசன்னா பி வரலே நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது மூத்த நீதிபதிகள் அனைவரும் உடன் இருந்தனர். நீதிபதி பிரசன்னா.பி.வரலே பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். 2008ம் ஆண்டு முதல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வரலே 2022ம் ஆண்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

 

The post உச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக பிரசன்னா பி.வரலே பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: