தாளடி பயிர்களை காக்க மேட்டூரில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜன. 24: திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்து இருப்பதாவது: மேட்டூர் அணையும் தவிர்க்க முடியாமல் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது, இதனால் டெல்டா பகுதி விவசாயம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளானது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்த பிறகு பெரும் செலவு செய்து விவசாயிகள் போராடி பயிரை மீட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவ மழையும் தற்பொழுது முடிந்து விட்டது. மழைப்பொழிவு ஏதும் இல்லாத நிலையிலும், மேட்டூர் அணையில் இருந்து நீர் கிடைக்காத நிலையிலும் பால் கட்டும் தருணத்தில் உள்ள தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க பெறாமல் உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. 20 நாள் முதல் 60 நாள் வரை தாளடி பயிர்கள் உள்ளது. இன்னும் இரண்டு முறை மேட்டூர் அணை திறந்தால் மட்டுமே தாளடி பயிரை காப்பாற்ற முடியும். மேலும் தமிழகத்தின் உணவு உற்பத்தி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா பகுதியில் உள்ள தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க மேட்டூர் அணை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

The post தாளடி பயிர்களை காக்க மேட்டூரில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: