ஐவர் ஹாக்கி உலக கோப்பை: ஓமனில் இன்று தொடக்கம்

மஸ்கட்: ஐவர் மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று தொடங்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அணிக்கு 5 பேர் விளையாடும் ஹாக்கி போட்டி பிரபலமாகி வருகிறது. இப்போது அது உலக கோப்பை போட்டியாகவும் நடைபெற உள்ளது. ஆண்களுக்கான ஐவர் உலக கோப்பை ஹாக்கி கடந்த ஆண்டு நடந்தது. இந்நிலையில், முதல்முறையாக ஐவர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகரில் இன்று தொடங்குகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் ஓமன், மலேசியா, பிஜி, நெதர்லாந்து, பி பிரிவில் ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்கா, உக்ரைன், ஜாம்பியா, டி பிரிவில் நியூசிலாந்து, உருகுவே, தாய்லாந்து, பராகுவே ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இந்திய மகளிர் அணி இடம் பெற்றுள்ள சி பிரிவில் அமெரிக்கா, போலந்து, நமீபியாஅணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்களில் 2 இன்றும், எஞ்சிய ஒரு ஆட்டம் நாளையும் நடக்கும். நாளை மறுநாள் காலிறுதி, ஜன.26ல் அரையிறுதி, ஜன.27ல் பைனல் நடத்தப்படும்.

The post ஐவர் ஹாக்கி உலக கோப்பை: ஓமனில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: