கோஹ்லியை மீண்டும் ஆர்சிபி அணி கேப்டனாக்க வேண்டும்; ஹர்பஜன்சிங் சொல்கிறார்

பெங்களூரு : ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணி ஆடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பாக புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, திடீரென எழுச்சி பெற்று 5வது இடத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணியில் சீராக ரன்களை சேர்த்து வந்த ஒரே வீரர் விராட் கோஹ்லி தான்.

13 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோஹ்லி ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 661 ரன்களை விளாசி உள்ளார். இதனால் ஆரஞ்ச் கேப் ரேசில் கோஹ்லி முதலிடம் வகிக்கிறார். ஆர்சிபி அணி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், “ஒருவேளை இந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், அடுத்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும். விராட் கோஹ்லியை ஏன் மீண்டும் கேப்டனாக கொண்டு வரக்கூடாது? ஏனென்றால் சென்னை அணியில் டோனி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அனைவரும் அறிவோம்.

அதுபோல் விராட் கோஹ்லி சிறந்த கேப்டன். ஆர்சிபி அணி என்ன மாதிரியான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது கோஹ்லிக்கு நன்றாக தெரியும். ஆர்சிபி அணியின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அனைவரும் கூடுதல் கவனத்துடன் வெற்றிபெறும் வெறியுடன் இருக்கிறார்கள். இதைதான் கோஹ்லி அணிக்குள் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக தான் கோஹ்லி மீண்டும் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகிறேன்’’ என்றார்.

The post கோஹ்லியை மீண்டும் ஆர்சிபி அணி கேப்டனாக்க வேண்டும்; ஹர்பஜன்சிங் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: