நெல்லுக்கு பிறகு சிறுதானியங்கள் பயிரிடலாம் கேவிகே தலைவர் அறிவுறுத்தல்

 

காரைக்குடி, ஜன.22: நெல் அறுவடைக்கு பிறகு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) தலைவர் முனைவர் செந்தூர்குமரன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் செம்மண் பூமியாக உள்ளது. முறையான அறிவியல் தொழில் நுட்பங்களை கடைபிடிக்காததால் மகசூல் குறைய காரணமாக உள்ளது. அதிகளவில் வேலி கருவை மண்டி கிடக்கிறது. இதில் மாடுகளை கட்டுவதால் சினை பிடிப்பது பாதிக்கிறது.

தவிர மனிதர்களுக்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. வேலி கருவை உள்ள நிலங்களை இயற்கை விவசாய நிலமாக மாற்ற வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையம் முறைகளால் அதிக லாபம் பெறலாம். வேளாண்மை, பண்ணை குட்டையில் மீன் வளர்த்தல், களான் வளர்த்தல், கால்நடை வளர்த்தல், தோட்டப்பயிர்கள் என ஒருங்கிணைந்த பண்ணையம் முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.

இதற்கான மாதிரி குன்றக்குடி கேவிகே வில் உள்ளது. விளை நிலங்களில் உள்ள வரப்புகளில் செம்மரம், தேக்கு போன்ற மரங்களை நடலாம். வேலிகருவை, யூக்கலிப்டஸ் போன்ற நிலங்களை மாற்றி இயற்கை விவசாய நிலங்களாக மாற்ற முன்வர வேண்டும். வேதியியல் உரங்களால் மண்ணை புண்ணாக்க கூடாது. நெல் பயிருக்கு பிறகு சிறுதானிய பயிர்களை பயிரிடலாம் என்றார்.

The post நெல்லுக்கு பிறகு சிறுதானியங்கள் பயிரிடலாம் கேவிகே தலைவர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: