ஆப்கானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: 6 பேருடன் ஆப்கன் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான டஸ்ஸால்ட் ஃபால்கன் 10 ரக ஜெட் விமானம் மருத்துவ பயன்பாட்டுக்காக 2 பயணிகள், 4 பணியாளர்களுடன் உஸ்பெகிஸ்தான் வழியே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜூகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றது. இது வடகிழக்கு ஆப்கானின் படாஷான் மாகாணம் சிபக் மாவட்டம் ஜெபக் மலைப்பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதிலிருந்த 6 பேர் பற்றிய எந்த தகவலும் வௌியாகவில்லை. அங்கு ஆப்கான் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆஃப்கானில் விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவுடையது அல்ல என ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஆப்கானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல. தாய்லாந்தில் இருந்து மாஸ்கோ செல்லும் வழியில் அந்த குட்டி விமானத்துக்கு பீகாரின் கயாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அது மொராக்கோ நாட்டில் பதிவு செய்யப்பட்ட விமானம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆப்கானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: