தா.பழூர் கீழ மைக்கேல்பட்டி தேவாலயத்தில் மாடுகளுக்கு புனித நீர் தெளிப்பு

 

தா.பழூர், ஜன.19: தா.பழூர் கீழ மைக்கேல்பட்டி தேவாலயத்தில் மாடுகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித அந்தோணியார் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளுக்கு வண்ண கலர் பூசி ,மாலை அணிவித்து மாடுகளை புனித மிக்கேல் ஆண்டவர் தேவாலயத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மாடுகளுக்கு பங்கு தந்தை அடைக்கலசாமி மந்திரித்து புனித நீர் தெளித்தார்.

இதில் பலரும் தங்கள் மாடுகளுக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்தனர். இதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கும் புனித நீர் தெளிக்கப் பட்டது. தா.பழூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த புனித நீர் தெளித்து பின்னர் மாடுகளின் சாணத்தை எடுத்து சென்று வீடுகளில் சிலுவை போடுவதன் மூலம் கால்நடைகள் பெருகும், இதன் மூலம் செல்வம் செழித்து வாழ்வில் சகல துன்பங்கள் நீங்கி நோய் நொடியின்றி வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை.

The post தா.பழூர் கீழ மைக்கேல்பட்டி தேவாலயத்தில் மாடுகளுக்கு புனித நீர் தெளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: