அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 5-ம் சுற்று நிறைவு: 15 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்..!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 5-ம் சுற்று நிறைவடைந்தது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான கார் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியின் 5-ம் சுற்று நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 5-ம் சுற்று முடிவில் 250 மாடுபிடி வீரர்கள், 425 காளைகள் களமிறங்கின. 5-வது சுற்று முடிவில் 15 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்திக் முதலிடத்தில் உள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித்குமார் 2-வது இடத்திலும் 7 காளைகளை அடக்கி முத்துக்கிருஷ்ணன் 3-ம் இடத்திலும் உள்ளார். இறுதிக்கட்ட பரிசோதனையில் 19 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

மொத்தம் 422 காளைகள் இறுதிக் கட்ட பரிசோதனை நிறைவடைந்து போட்டிக்கு அனுமதிக்கப்பப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் தலையில் காளை முட்டியதில் வீரர்கள் பாலமுருகன், பிரபாகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 5-ம் சுற்று நிறைவு: 15 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்..! appeared first on Dinakaran.

Related Stories: