அரிசி, கோதுமை, சர்க்கரைக்கான ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது: ஒன்றிய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான திட்டம் ஏதும் ஒன்றிய அரசிடம் இல்லை என ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.இந்தியாவிற்குள் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்திலும், பாஸ்மதி அல்லாத பிற அரிசி வகைகளுக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்திலும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்தாண்டு அக்டோபரில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி தடை நீக்கப்படுமா? என்று விவசாயிகள், வர்த்தகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான திட்டம் ஏதும் ஒன்றிய அரசிடம் தற்போது இல்லை. அதேபோல் கோதுமை மற்றும் சர்க்கரையை இந்தியா இறக்குமதி செய்யாது. இந்தோனேசியா, செனகல், காம்பியா ஆகிய நாடுகளின் உணவு பாதுகாப்புத் தேவைகளை கருத்தில்கொண்டு அந்நாடுகளுக்கு ஒன்றிய அரசு அரிசி வழங்கி வருகிறது’ என்றார்.

The post அரிசி, கோதுமை, சர்க்கரைக்கான ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது: ஒன்றிய அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: