172 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் பொங்கல் போனஸ் வழங்கல்

 

பெ.நா.பாளையம், ஜன.14: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெண் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். நகர்மன்ற தலைவர் அறிவரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புயல் மழை நாட்களில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் சென்று பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நகராட்சி தூய்மை பணியாளர்கள் 172 பேர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பொங்கல் போனசாக ரூ.4 லட்சம் மற்றும் இனிப்பு காரம் கொண்ட தொகுப்பை தலைவர் அறிவரசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் ரதிராஜேந்திரன், பொறியாளர் சோமசுந்தரம், தூயதமிழ் இளைஞர் பாசறை நிறுவனர் தமிழ் மணிகண்டன், வேலாயுதம், நகர்மன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, மீனா கணேசன், ரேவதி, சித்ரா, ஜானகி, வனிதாமணி, ரேகா, ஜனார்த்தனன், மாடசாமி, முருசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் சான்றிதழை தலைவர் அறிவரசு வழங்கினார்.

The post 172 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் பொங்கல் போனஸ் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: