சிங்கம்புணரி பள்ளியில் அஞ்சல் உறை வெளியீட்டு விழா

சிங்கம்புணரி, ஜன. 13: சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் முன்னாள் அமைச்சர் மாதவன் நிறுவிய பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மாதவன் படம் பதித்த அஞ்சல் உறை வெளியீட்டு விழா மற்றும் பள்ளியின் 51வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தலைமை வகித்து அஞ்சல் உறைகளை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் மாதவன் மகளும் பள்ளியின் தலைவருமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், பள்ளி தாளாளர் அருளாளன், சாந்தி செழியன், முன்னிலை வகித்தனர். அஞ்சல் துறை தென் மண்டல தலைவர் ஜெய்சங்கர் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் அமைச்ச்ர் கே. ஆர்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்சிகள், மற்றும் சாகச நிகழ்சிகள் செய்து காட்டினர். இதில் முன்னால் எம்எல்ஏ அருணகிரி, மாவட்ட அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, பொதுகுழு உறுப்பினர் சோமசுந்தரம், நகரச் செயலாளர் கதிர்வேல், அவைத்தலைவர் சிவக்குமார், மருத்துவர் அருள்மணி நாகராஜன், பள்ளி மேலாளர் கிருஷ்ணன், சரவணன் பள்ளி முதல்வர் சியாம் பிராங்கிளின் டேவிட் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post சிங்கம்புணரி பள்ளியில் அஞ்சல் உறை வெளியீட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: