ராமர் கோயில் விழாவை புறக்கணிப்பதாக காங்., மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி அறிவித்த நிலையில் பிற கட்சிகளும் பங்கேற்காது என தகவல்

டெல்லி: ராமர் கோயில் விழாவை புறக்கணிப்பதாக காங்., மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி அறிவித்த ஆணை நிலையில் பிற கட்சிகளும் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் விடுத்த அழைப்பை அகிலேஷ் யாதவ் நிராகரித்தார். கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பை சோனியா, கார்கே உள்ளிட்ட காங். மூத்த தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.

ராமர் கோயில் திறப்பு, ஆன்மிக விழா அல்ல என்றும் பாஜக, ஆர்ஏஸ் ஏஸ் ஏற்பாடு செய்துள்ள அரசியல் விழா என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் திறப்பு விழா அரசியல் நாடகம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார். கட்டி முடிக்காத ராமர் கோயிலை தேர்தல் லாபத்துக்காக முன்கூட்டியே திறப்பதாக பல சங்கராச்சாரியார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு அழைப்பிதழே வரவில்லை என ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன. ராமர் பாஜகவுக்கு மட்டும் சொந்தம் இல்லை என சிவ்சேனா உத்தவ் தாக்கரே பிரிவு விமர்சித்து வருகிறது.

 

The post ராமர் கோயில் விழாவை புறக்கணிப்பதாக காங்., மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி அறிவித்த நிலையில் பிற கட்சிகளும் பங்கேற்காது என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: