தஞ்சை மாவட்டத்தில் 98 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

 

தஞ்சை ஜன.10: தஞ்சை மாவட்டத்தில் 98..54 சதவீதம் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒட்டி நேற்று வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் தமிழக அரசு பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகளை முழுமையாக இயக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

இதன்படி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் 2957 பேருந்துகள் இயக்கப்பட்டன.தஞ்சை மாவட்டத்தில் 418 பேருந்துகள் இயக்கப்பட்டன. இது 98.12 சதவீதம் ஆகும். தஞ்சை மாநகரில் மொத்தம் 80 நகர பேருந்துகளில் 60 பேருந்துகள் இயக்கப்பட்டன. இது 80 சதவீதம் ஆகும். இதே போல் தஞ்சை கிளையிலிருந்து 47 மப்சல் பேருந்துகளில் 40 பேருந்துகள் இயக்கப்பட்டன. இது 90% ஆகும். இதனால் பயணிகள் பயணம் பாதிக்கப்படவில்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தஞ்சை மாவட்டத்தில் 98 சதவீதம் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: