10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத் தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணைகளும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிக்கு ஏற்றார் போல்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் என கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது; “தமிழகத்தில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை; தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக, பொதுத்தேர்வு தேதி பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை அறிவிக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என தெரிவித்தார்.

The post 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: