கடலையூர் பள்ளியில் கோள்கள் திருவிழா

கோவில்பட்டி, ஜன. 9:தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் 2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 2024 இடங்களில் வானியல் நிகழ்வுகளை கொண்டு செல்ல கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோள்கள் திருவிழா, கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்கள் திலகவள்ளி, சிவசங்கரேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியை பானுமதி வரவேற்றார்.கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், முத்து முருகன் ஆகியோர் வானியல் குறித்தும், தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயமுருகன், குணசேகரன், தேவி, இளநிலை உதவியாளர் நாகராஜ், அலுவலக உதவியாளர் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அய்யமுத்துராஜா நன்றி கூறினார்.

The post கடலையூர் பள்ளியில் கோள்கள் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: