ரிஸ்வான் (6), ஜமால் (0) இருவரும் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். கடுமையாகப் போராடிய இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. ரிஸ்வான் 28 ரன் எடுத்து லயன் சுழலில் வார்னர் வசம் பிடிபட்டார். ஜமால் 18 ரன், ஹசன் அலி 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 115 ரன்னுக்கு சுருண்டது (43.1 ஓவர்). ஹம்சா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4, லயன் 3, ஸ்டார்க், ஹெட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி. களமிறங்கியது. கவாஜா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில், வார்னர் – லாபுஷேன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்து அசத்தினர். வார்னர் 57 ரன் (75 பந்து, 7 பவுண்டரி) விளாசி சஜித் கான் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.
இந்த இன்னிங்சுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா 25.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. லாபுஷேன் 62 ரன் (73 பந்து, 9 பவுண்டரி), ஸ்மித் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். வீரர் ஆமிர் ஜமால் ஆட்ட நாயகன் விருதும், ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். ஆஸி. அணி 12 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post ஹாட்ரிக் வெற்றியுடன் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.