இந்நிலையில் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று விஜயகாந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
The post மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் பிரேமலதாவிற்கு ஆறுதல்..!! appeared first on Dinakaran.