சாலையில் உலா வந்து பீதியை ஏற்படுத்திய காட்டு எருமை

மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இறங்கிய காட்டு எருமை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

பிரபல சுற்றுலாத்தலமான மூணாறில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் தேவிகுளம் கேப் சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஒரு டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெரிய காட்டு எருமை உலா வந்தது.

சிறு குழந்தைகள் உட்பட உள்ள சுற்றுலா பயணிகள் சாலை அருகே நின்று கொண்டு தேயிலை தோட்டத்தின் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒற்றை காட்டு எருமை சாலையில் இறங்கியது.

சாலையின் மேல் பகுதியில் பெரிய பாறைகளும் கீழ் பகுதியில் பெரிய பள்ளம் இருந்ததால் காட்டு எருமை எங்கு போவது என்று தெரியாமல் சாலையில் அங்கும் இங்கும் அரை மணிநேரம் அலைந்து திரிந்தது. இது வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மூணாறை நோக்கி சாலையில் நடந்த காட்டு எருமை தேயிலை காட்டிற்குள் சென்றது.

The post சாலையில் உலா வந்து பீதியை ஏற்படுத்திய காட்டு எருமை appeared first on Dinakaran.

Related Stories: