வருசநாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கொட்டை முந்திரி

வருசநாடு, ஜன. 3: வருசநாடு பகுதியில் இருந்து கொட்டை முந்திரி பருப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி வருகிறது இந்நிலையில் சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், வருசநாடு கிராமத்திற்கு வந்து ஏற்றுமதி பணி தொடங்கி வருகிறது, மேலும் கொட்டை முந்திரி விதையை கிலோ ஒன்றுக்கு 80 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விலைக்கு வாங்கி அதை பதப்படுத்தி பருப்புகளாக உடைத்து ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வருசநாட்டு கொட்டை முந்திரி பருப்பு ருசியாகவும் சுவையாகும் இருப்பதாக வெளிநாட்டினர் அதிகமாக வந்து கொள்முதல் செய்து பருப்புகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதனால் ஒரு கிலோ பருப்பின் விலை முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பிரிக்கப்பட்டு முதல் தரம் ரூ.1,150, இரண்டாம் தரம் ரூ.950ல் இருந்து ரூ.1000 வரையும் மூன்றாம் தரம் ரூ.900 என டின்களில் அடைத்து மொத்தமாக லாரிகளில் ஏற்றி மும்பை, கல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்று பின்பு வெளிநாடுகளுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து தமிழ் மாதங்களான சித்திரை, வைகாசி, மாதங்களில் கொட்டை முந்திரி விதைகளை உடைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் 300க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் இப்பணிகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

The post வருசநாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கொட்டை முந்திரி appeared first on Dinakaran.

Related Stories: