ஆஸியில் இன்று ஆரம்பம் யுனைடட் கோப்பை டென்னிஸ்

பெர்த்/சிட்னி: குழு டென்னிஸ் போட்டியான யுனைடட் கோப்பை ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி நகரங்களில் இன்று தொடங்குகிறது. ஏடிபி, டபியூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டிக்கு பிறகு இந்த ஆண்டு முக்கிய டென்னிஸ் போட்டியாக இப்போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு முன்னோட்டமாக நடக்கும், இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா உட்பட 18 நாடுகள் களம் காண உள்ளன. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக தலா 3 வீரர்கள், வீரராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். சிலி உட்பட சில நாடுகள் சார்பில் 4 அல்லது 5 பேர் மட்டும் விளையாட உள்ளனர். இந்தப் போட்டியில் உலகின் நெம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்(செர்பியா), உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்(போலாந்து) உட்பட சுமார் 70 முன்னணி ஆட்டக்காரர்கள் களமிறங்க உள்ளனர். லீக் சுற்று ஆட்டங்கள் பெர்த், பிரிஸ்பேன் நகரில் டிச.29 முதல் ஜன.3ம் தேதி வரை நடக்கும். பெர்த்தில் காலிறுதி ஆட்டங்கள் ஜன.3ம் தேதியும், சிட்னியில் ஜன.4, 5தேதிகளிலும் நடைபெறும். அரையிறுதி ஆட்டங்கள் ஜன.6, இறுதி ஆட்டம் ஜன.7ம் தேதிகளில் சிட்னி நடைபெறும்.

பங்கேற்கும் நாடுகள், பிரிவுகளும்
சிட்னி:
பிரிவு-ஏ: போலாந்து, ஸ்பெயின், பிரேசில்
பிரிவு-சி:அமெரிக்க ஒன்றியம், கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா
பிரிவு ஈ: செக் குடியரசு, சீனா, செர்பியா
பிரிஸ்பேன்:
பிரிவு பி:கிரீஸ், கனடா, சிலி
பிரிவு டி: பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி
பிரிவு எப்: குரோஷியா, நெதர்லாந்து, நார்வே

The post ஆஸியில் இன்று ஆரம்பம் யுனைடட் கோப்பை டென்னிஸ் appeared first on Dinakaran.

Related Stories: