திருட்டு வழக்குகளில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து நகை, பணம் மீட்பு

*வேலூர் டிஐஜி முத்துசாமி பாராட்டு

ராணிப்பேட்டை : திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்து நகை, பணம் மீட்பதில் குற்றவாளிகளை பிடித்து நகை, பணம் மீட்பதில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்று வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டினார். ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதபடைக்கு சொந்தமான கோப்புகள், பதிவேடுகள், வாகனங்கள் மற்றும் காவலர்கள் பராமரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து டிஐஜி முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம் புதியதாக உருவாக்கபட்டுள்ளதால் ஆய்வுபடைக்கான மைதானம், காவலர் குடியிருப்பு, பழுதடைந்துள்ள காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை சீரமைப்பதற்கும் புதியதாக காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கும் பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ராணிப்பேட்டை அருகே ஆயுதப்படை மைதானத்திற்கான இடம், குடியிருப்புகளுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவது, பராமரிப்பது பணிகளை காவலர் வீட்டுவசதி வாரியத்தினர் மூலம் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் நல்ல முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருட்டு வழக்குகளில் பொருட்களை மீட்பது ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

குறிப்பாக திருட்டு வழக்குகளில் பணம், நகை ஆகியவைகள் ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் அதிகளவில் மீட்டுள்ளனர். குற்றாளிகளையும் கைது செய்துள்ளனர். ஆற்காடு நகரில் ஆரணி சாலை உள்பட சில இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ராணிப்பேட்டை டிஎஸ்பி தலைமையில் வணிகர்களுடன் கூட்டம் நடத்தி நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

காவேரிப்பாக்கம் எல்லைகுட்பட்ட பகுதியில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கில் மூன்று நாட்களிலேயே குற்றவாளியை பிடித்து நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் திருட்டு போன 358 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2024ம் ஆண்டில் செல்போன் திருட்டு குறித்து புகார் அளிக்க செயலி கொண்டு வரப்படும். இவ்வாறு டிஐஜி முத்துசாமி தெரிவித்தார். அப்போது மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி, ஏடிஎஸ்பிக்கள் விஸ்வேஸ்வரய்யா, குமார் மற்றும் டி.எஸ்.பி, ஆயுதபடை போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருட்டு வழக்குகளில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து நகை, பணம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: