கமுதி அருகே பெருநாழியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

கமுதி, டிச.23: கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு, விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதில் பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாயல்குடி, டி.எம்.கோட்டை, ராமசாமிபட்டி ஆகிய ஊர்களை சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 518 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்று பேசினார்.

மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம்,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், பள்ளி நிர்வாக குழு தலைவர் பழனிக்குமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் பாலமுருகன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பா ஆத்திமுத்து, கந்தசாமி, சித்ரவேல் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் இளமுருகன் நன்றி கூறினார்.

The post கமுதி அருகே பெருநாழியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: