ஜல்லி ஏற்றி வந்தபோது கால்வாயில் சிக்கி லாரி கவிழ்ந்தது

வேளச்சேரி: பெருங்குடி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, டிரைவர் ராஜேஷ் (33), என்பவர், திண்டிவனத்தில் இருந்து லாரியில் ஜல்லிகற்களை ஏற்றிக்கொண்டு வந்தார். பெருங்குடி எம்ஜிஆர் மெயின் ரோட்டில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அருகே வளைவில் திரும்பியபோது, மழைநீர் கால்வாய் மீது லாரி ஏறியதால், மழைநீர் கால்வாய் உடைந்து, லாரி கவிழ்ந்தது.

இதில், டிரைவர் ராஜேஷ் அதிர்ஷ்டவசமாக தப்பினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், லாரி சட்ட கல்லூரி நுழைவாயிலின் முன்பு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஜல்லி ஏற்றி வந்தபோது கால்வாயில் சிக்கி லாரி கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: