தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத் சாதாரண ரயில்கள் இல்லை: வைகோ கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்

சென்னை: வந்தே பாரத் சாதாரண ரயில்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படாது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தமிழ்நாட்டில், அதிவிரைவு வந்தே பாரத் சாதாரண ரயில்கள் இயக்கப்படுமா, சாமானிய மக்களுக்காக ஏசி அல்லாத அதிவிரைவு வந்தே பாரத் சாதாரண ரயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே நடத்தியதா, அப்படியானால், அதன் விவரங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற ஏழை மக்களுக்கு சாதாரண படுக்கை மற்றும் பொது வகுப்பு வசதிகள் உள்ளதா, அப்படியானால், கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் யாவை, வந்தே சதாரண ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் வழித்தடங்களில் தமிழகமும் உள்ளடங்குமா, அப்படியானால், இந்த ரயில்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: தமிழ்நாட்டில் வந்தே பாரத் சாதாரண ரயில் இயக்கம் இல்லை. ரயில்வே தொடர்பு மாநில எல்லைகளைத் தாண்டிச் செல்லும்போது, அதன் தேவைக்கேற்ப, எல்லைகளைக் தாண்டி ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது இந்திய ரயில்வேயின் போக்குவரத்து செயல்பாட்டு சாத்தியங்கள் மற்றும் நிதிநிலை போன்றவற்றுக்கு உட்பட்டவையாகும். என்றார் என்று பதிலளித்தார்.

The post தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத் சாதாரண ரயில்கள் இல்லை: வைகோ கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: