தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 11% கூடுதலாக பெய்துள்ளது : வானிலை ஆய்வு மையம்

சென்னை : சென்னையில் வடகிழக்கு பருவமழை 42 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 11% கூடுதலாக பெய்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 420.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 465.5-மி.மீ. மழைப் பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை 42 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 766,4 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1088.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 151% கூடுதலாக பெய்துள்ளது கன்னியாகுமரியில் 103%,தென்காசியில் 81%, மதுரையில் 155%, தூத்துக்குடியில் 119% கூடுதலாக வடகிழக்கு பருவமழை கிடைத்துள்ளது,” என்று தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 110 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 90 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் நேற்று 23 செ.மீ., காயல்பட்டினத்தில் 21 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குலசேகரப்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 செ.மீ., மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 18 செ.மீ., மாஞ்சோலையில் 17 செ.மீ., ஊத்து -பகுதியில் 15 செ.மீ., மூலைக்கரைப்பட்டியில் 12-செ.மீ., அம்பாசமுத்திரம் 11 செ.மீ., பாபநாசத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம்-17.4செ.மீ. , சாத்தான்குளம் 15.0 செ.மீ. , தூத்துக்குடி 13.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 11% கூடுதலாக பெய்துள்ளது : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: