கும்பகோணம்: மமக மாநில தலைவரும், எம்எல்ஏவுமான பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒருதலைபட்சமான முடிவாகும். ஆளும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தமான கேள்விகளை முன்னெழுப்பியவர் மஹூவா மொய்த்ரா. அவரது சீரிய செயல்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாமல் போலியான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீதான விசாரணை 500 பக்க அறிக்கையை சில மணி நேரத்தில் படித்து மக்களவையில் விவாதிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தனக்கு எதிராக வலுவாக களமாடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சர்வாதிகார போக்கோடு ஒடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டிருப்பது இந்திய ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரான செயல். நமது நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post எம்.பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் ஜனநாயகம் மரித்து வருவதை காட்டுகிறது: ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை appeared first on Dinakaran.
