சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கடந்த டிச.6ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மின் உபயோகிப்பாளர்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4ம் தேதி முதல் 7ம் தேதிவரை இருந்தது, அபராத தொகை இல்லாமல் டிச.18ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.