இதையடுத்து மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் செயலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது; பிரதமர்-அதானி உறவை அம்பலப்படுத்திய மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு மோசமான முன்னுதாரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவியை அரசியல் காரணங்களுக்காக பறிப்பது தவறான செயலாகும். டிசம்பர் 29-ல் விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சி சிறுகலூரில் நடைபெறும். அம்மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி தலைவர்கள் கார்கே, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
The post மகுவா மொய்த்ரா பதவி பறிப்பு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவியை அரசியல் காரணங்களுக்காக பறிப்பது தவறு: திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.
