பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இருந்து இத்தாலி விலகல்

பீஜிங்: பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இருந்து இத்தாலி விலகியது. சீனாவின் கனவு திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டமானது ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சாலை திட்டமாகும். இத்திட்டத்தில் பிலிப்பைன்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடந்த 2019ல் கையெழுத்திட்டன. ஜி-7 நாடுகள் இத்திட்டத்தில் சேர்ந்தன. சீனாவின் பொருளாதார வளத்தை விரிவுபடுத்தும் திட்டமாக, ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை ஒரு கருவியாக சீனா பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் சேர்ந்த மற்ற நாடுகள் பெரும் கடனாளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இத்தாலி, திடீரென இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் இந்தத் திட்டத்தில் இருந்து விலகுவது குறித்து சீனாவிடம் இத்தாலி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ெடல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில், இந்தியா முன்வைத்த பொருளாதார வழித்தடம் உலக அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் துணை நிற்பதாக அறிவித்தது. இந்தியா முன்வைக்கும் திட்டத்திற்கு ஆதரவு பெருகி உள்ளதால், சீனப் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இருந்து இத்தாலி விலகல் appeared first on Dinakaran.

Related Stories: