இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த், பிரனாய்

பாலி: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியர்கள்  பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனாய் ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இந்தோனேஷியாவின் பாலி நகரில் நேற்று  காலிறுதிக்கு முந்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டி உடன் மோதினார்.  முதல் செட்டை  17-21 என போராடி இழந்த சிந்து அடுத்த 2 செட்களை 21-7, 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால் 47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் வென்ற சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்  ஸ்ரீகாந்த் ஒரு மணி 2 நிமிடங்களில்  13-21, 21-18, 21-15 என்ற செட்களில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியையும்  மற்றொரு இந்தியர் பிரனாய் ஒரு மணி 11 நிமிடங்களில் 14-21, 21-19, 21-16 என்ற செட்களில்  டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னையும் பேராடி வென்று காலிறுதியை உறுதி செய்தனர்….

The post இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த், பிரனாய் appeared first on Dinakaran.

Related Stories: