மின் சிக்கன கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

 

ஊட்டி, டிச.8: மத்திய திறனூக்க செயலகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சார்பில் மின் ஆற்றல், மின் சிக்கனம், மின் பாதுகாப்பு, ஆற்றல் ஆகிய தலைப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றது.  இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், மின்வாரிய செயற்பொறியாளர்கள் சிவக்குமார், சிவசங்கரன், முத்துகுமார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சரவணன், சங்கர், ராஜூ, கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முடிவில் உதவி செயற்பொறியாளர் ராதா நன்றி கூறினார்.

The post மின் சிக்கன கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: