புதுமை பெண்கள் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

 

ஊட்டி, டிச.8: புதுமை பெண்கள் திட்ட செயல்பாடுகள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் ஊட்டி கலெக்டர் தலைமையில் நடந்தது. சமூக நலத்துறை சார்பில் புதுமை பெண் திட்டம் (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்டம்) மற்றும் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் புதுமை பெண் திட்ட பயனாளிகளை அதிகரிக்க கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட அனைத்து பயனாளிகளும் ஆதார் இணைப்பு ஏற்படுத்திட சிறப்பு முகாம்கள் நடத்திட முதன்மை வங்கி மேலாளருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் நலனிற்காக பாடுபட்ட நபர்களையும், பெண் குழந்தைகளின் நலனிற்காக செயல்பட்ட சிறந்த ஊராட்சியையும் கவுரவித்து விருது வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், தொடர்பான ஒருநாள் பயிற்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் புனித அந்தோணியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தற்போது பயின்று வரும் 37 வயதுள்ள ஜீவா என்பவரை ஊக்கப்படுத்திட வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கல்லூரி முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுமை பெண்கள் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: