சென்னை : சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. உடனடியாக வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதிகள் ஜனவரி முதல் வாரத்தில் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.