பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம். மிக அத்தியாவசிய சூழ்நிலை காரணமாக வெளியில் வரநேரிட்டால் மின்சார கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், மரங்களின் கீழ் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாநகராட்சி மூலம் 101 நடமாடும் மருத்துவ குழுக்களும், 169 நிவாரண மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 318 மருத்துவ அலுவலர்களும், 635 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: