தெற்கு காசாவில் விடிய விடிய இஸ்ரேல் குண்டு வீச்சு: பாலஸ்தீனர்கள் பலி 15,200ஐ கடந்தது

கான்யூனிஸ்: போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 15,200ஐ கடந்து விட்டது. இஸ்ரேல்,ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒருபகுதியாக இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த 7 நாள் போர் நிறுத்தம்நேற்று முன்தினம்(டிச.1) முடிவுக்கு வந்தது. இதையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 178 பேர் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 15,200ஐ கடந்துவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை முடங்கியது
கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தைக்காக சென்று இருந்த பிரதிநிதிகளை இஸ்ரேல் திரும்ப அழைத்து உள்ளது. இதனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கி விட்டது.

The post தெற்கு காசாவில் விடிய விடிய இஸ்ரேல் குண்டு வீச்சு: பாலஸ்தீனர்கள் பலி 15,200ஐ கடந்தது appeared first on Dinakaran.

Related Stories: