கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் சோளம், துவரை சாகுபடி தீவிரம்

வருசநாடு, டிச. 3: கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை, சிங்கராஜபுரம், முறுக்கோடை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்கள் உள்ளது. இதில் மொச்சை ,கம்பு , சோளம், துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக மழை குறைவாக இருந்தது. அதனால், விவசாய பணிகள் தொய்வடைந்தது. மானாவாரி நிலங்கள் துவரை மற்றும் சோளத்திற்கு ஏற்றதாக உள்ளது. இந்நிலையில் சூறாவளி காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் துவரை சாகுபடி மற்றும் விவசாயிகளுக்கு தேவையான மண்வரப்பு பணிகள் மற்றும் மரத்தைச் சுற்றி குழிகள் எடுக்க விவசாயிகளுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது தொடர் மழை காரணமாக பயிர்கள் வளர்ச்சி நன்றாக உள்ளது.’’ என்றனர்.

The post கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் சோளம், துவரை சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: