திருத்துறைப்பூண்டியில் ரூ.1 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிட கட்டுமான பணி

 

திருத்துறைப்பூண்டி, மே 18: திருத்துறைப்பூண்டியில் கோடை மழையிலும் ரூ.1 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அலுவலகத்தில் இயங்கி வந்தது. கட்டிடம் சேதம் அடைந்தால் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது மடப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் தாலுகா அலுவலகம் வளாகத்தில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பணி தொடங்கிய நாள் முதல் கோடை மழை பெய்து வரும் நிலையில் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post திருத்துறைப்பூண்டியில் ரூ.1 கோடியில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிட கட்டுமான பணி appeared first on Dinakaran.

Related Stories: