மியான்மர் உள்நாட்டு போரில் ராணுவம் தொடர் தோல்வி

பாங்காக்: மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ராணுவம் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், அங்கு ஜனநாயக ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்புள்ளது. மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு, அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி ராணுவம் (எம்என்டிஏஏஏ) உள்ளிட்ட 3 கிளர்ச்சிப் படையினரின் கூட்டணி கடந்த அக்டோபர் 27ம் தேதி, ராணுவத்துக்கு எதிரான ஆபரேஷன் 1027ஐ தொடங்கி உள்ளது. இதில், 4 முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் சீனா எல்லையில் அமைந்துள்ள 4 பொருளாதார தளங்கள் உள்பட 180 வலுவான ராணுவ நிலைகளை மியான்மர் ராணுவம் இழந்துள்ளது. இந்த உள்நாட்டுப் போரில் இருதரப்பும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

எம்என்டிஏஏஏ கிளர்ச்சி கூட்டணியின் செய்தி தொடர்பாளர் லீ க்யார் வின் கூறுகையில், “தற்போதைய உள்நாட்டு போர் மியான்மரில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பாகும்,” என்று தெரிவித்தார். இதனால், அங்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகம் மீண்டும் துளிர்க்கும் என்று அரசியல் கட்சிகளிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

The post மியான்மர் உள்நாட்டு போரில் ராணுவம் தொடர் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: