சீமைக் கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல், நீர்வளம், ஊரக வளர்ச்சித்துறை செயலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி திட்டம் வகுக்க ஆணையிட்டுள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கையை வகுத்து 2 ஆண்டுகள் ஆகியும் முன்னேற்றம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

The post சீமைக் கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: