தொடர் மழை காரணமாக பொதுமக்கள் நோய் பாதிப்புகளால் அவதி: பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுரை

 

ஊட்டி,நவ.27: ஊட்டியில் மழை மற்றும் பனி மூட்டமான காலநிலைகளால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் ஏற்பட்டு வருகிறது.  நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை மற்றும் சில சமயங்களில் மழையின்றி பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுகிறது.மாலை நேரங்களில் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதுபோன்ற மாறுபட்ட காலநிலைகளால் பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்த சூழலில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். மாறுபட்ட காலநிலைகளால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.காதுகளில் குளிர் காற்று புகாதவாறு தொப்பி அல்லது மப்ளர் ஆகியவைகளை பயனபடுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

The post தொடர் மழை காரணமாக பொதுமக்கள் நோய் பாதிப்புகளால் அவதி: பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: