ஊத்துக்கோட்டை தாலுகா முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை தாலுகா எல்லைக்குட்பட்ட பகுதியில் 99 வருவாய் கிராமங்கள் உள்ளது. இதில் பணியாற்றும் வருவாய் கிராம ஊழியர்கள் நேற்று தாலுகா அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட செயலாளர் லாலாஜி தலைமை தாங்கினார். பொருளாளர் முனிவேல், வட்ட துணைத்தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் இறந்து விட்டால் அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் தவிக்கும் என்பதற்காக 1999ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கினார். தற்போது அந்த உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழங்க வேண்டும், கடந்த ஜனவரி மாதம் பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post ஊத்துக்கோட்டை தாலுகா முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: