அதுபற்றிய விவரம்: அலோஹா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.விமானத்தில் 89 பயணிகள், 6 பணியாளர்கள் இருந்துள்ளனர். பசிபிக் பெருங்கடலுக்கு மேலே 24,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானத்தின் மேற்கூரை நடுவானில் பறந்தது. இதில், பணிப்பெண்ணாக இருந்த கிளாராபெல்னான்சிங் என்பவர் அப்படியே பறந்து போனார். இதை பார்த்ததும் பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். சில விநாடிகளில் விமானத்தில் தீப்பிடித்தது. அந்த நிலையிலும் விமானி கஹுலுய், விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.
அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர். விமானி திறமையாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அனைவரும் தப்பினர். ஒரு பணி பெண் மட்டும் சீட் பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கூறுகையில், விமானத்தில்கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்வியும் திடீரென ஏற்பட்ட அழுத்தம்தான் இந்த மோசமான விபத்துக்கு காரணம். இடதுபுற இன்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஏறும்போது விமானத்தின் உடல் பகுதியில் விரிசல் இருப்பதை பயணி ஒருவர் கவனித்துள்ளார். இருப்பினும், அதை பெரிதாக அவர் எடுத்து கொள்ளவில்ைல. ஒருவேளை விமான ஊழியர்களிடம் கூறியிருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கும்.
The post அமெரிக்காவில் பரபரப்பு; நடுவானில் விமானத்தின் மேற்கூரை பறந்தது: பயணிகள், பணிப்பெண்கள் அலறல் appeared first on Dinakaran.
