பெண்களுக்கு பொருளாதார முன்னேற்ற பயிற்சி

 

பந்தலூர், நவ.22: பந்தலூர் அருகே நாடுகாணி அங்கன்வாடியில் பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நாடுகாணி அங்கன்வாடியில் ஆல் த சில்ரன் ஒயிட் ஆரா டிரஸ்ட்,ஏகம் பவுண்டேஷன், சாலிடரிடட் ஸ்மார்ட் அக்ரி திட்டம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாடி தோட்ட விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். அங்கன்வாடி அமைப்பாளர் திருசெல்வி முன்னிலை வகித்தனர்.

சாலிடரிடட் அமைப்பு பயிற்றுநர் ஆரோக்கியசாமி மற்றும் மணிகண்டன் ஆகியோர் வீட்டு தோட்டங்கள் அமைக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்புமைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் சுயதொழில் வாய்ப்புகள் வருவாயை பெருக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து விதை பயிரிடுதல்,மண், உரம் தயாரிப்பு முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

The post பெண்களுக்கு பொருளாதார முன்னேற்ற பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: