ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைப்பு

நீலகிரி: ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்னம், நினைவு தினமான டிசம்பர் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி, இந்திய விமானப்படையின் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 14 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முப்படை விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி மற்றும் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவுகளை அந்த குழு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தது.

வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. இந்த நிலையில், குன்னூர் போலீசும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்னம், நினைவு தினமான டிசம்பர் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது. மேலும் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.

The post ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: